கோவை : நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க-விற்கு பரிசுப் பெட்டகம் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொள்ளாச்சியில் ஒரு வீட்டில் பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டிருப்பதை மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூகாம்பிகா அம்பலப்படுத்தியுள்ளார்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் எம்.பி. மகேந்திரன், தி.மு.க.வில் சண்முகசுந்தரம், அ.ம.மு.க.வில் முத்துக்குமார் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இதேபோல, மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை வெளி கொண்டு வந்தவர்களின் ஒருவரான மூகாம்பிகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கோவையில் இருந்து லண்டனுக்கு காரிலேயே சென்று சாதனை படைத்தவர்.
வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அனைத்து வேட்பாளர்களும் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், மூகாம்பிகா பொள்ளாச்சியில் நேற்று மாலை வீடு, வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு ஒரு வீட்டில் அ.ம.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னமான பரிசுப் பெட்டகம் இருந்துள்ளதை மூகாம்பிகா கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து மூகாம்பிகாவிடம் பேசியபோது, “நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, ஒரு பாட்டியின் வீட்டுக்கு சென்றிருந்தோம். அந்தப் பாட்டி எதர்ச்சையாக இந்தப் பரிசு பெட்டகத்தை காட்டி, ‘அவங்க இத கொடுத்துருக்காங்க… நீங்க என்ன கொடுப்பீங்க..? டார்ச்லைட் சின்னம்னா, டார்ச்லைட் கொடுப்பீங்களா?’ என்று கேட்டார். அந்தப் பரிசு பெட்டகத்தில் ஜெயலலிதா, சசிகலா, தினகரன் ஆகியோரது படங்கள் இருந்தன. உள்ளே என்ன இருந்தது..? என்று பார்க்கவில்லை. நம் மக்களை எந்த அளவுக்கு மாற்றி வைத்திருக்கிறார்கள் என்று பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. இது எங்களுக்கு முதல் தேர்தல். ஒவ்வொரு விஷயத்துக்கு அனுமதி வாங்குவதே சிரமமாக இருக்கிறது. என்னுடைய காரில் கூட கட்சி கொடி கட்ட விடுவதில்லை. மாற்றம் வேண்டும் என்றால், மக்கள் தான் மாற வேண்டும்,” என்றார்.