கோவை மத்திய சிறையில் மாநகர போலீசாரின் திடீர் சோதனையால் பரபரப்பு

கோவை : கோவை மத்திய சிறையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட பொருட்கள் கைதிகளுக்கு வழங்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, மாநகர போலீசார் இன்று திடீரென சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : கோவை மத்திய சிறையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட பொருட்கள் கைதிகளுக்கு வழங்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, மாநகர போலீசார் இன்று திடீரென சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவை மத்திய சிறையில் பீடி, சிகரெட், கஞ்சா மற்றும் செல்போன் போன்ற அனைத்து தடை செய்யப்பட்ட பொருட்களும் இரண்டாம் நிலை காவலர்கள் மூலம் கைதிகளுக்கு வழங்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதேபோல, சிறைத்துறை நிர்வாகமே சிறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர்களின் சட்டவிரோத நடவடிக்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, மத்திய சிறை கண்காணிப்பாளர் தகவல் பலகையில் அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். 

அதாவது, 2017-ம் ஆண்டில் பணி நியமனம் செய்யப்பட்டு சிறையில் பணிபுரிந்து வரும் இரண்டாம் நிலை காவலர்கள் ஒரு சிலர் தடை செய்யப்பட்ட கஞ்சா போன்ற இதரப் பொருட்களை சிறைக்குள் கடத்துவதாகவும், தொடரும்பட்சத்தில், ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவலாக எழுத்து வடிவில் அறிவிப்பு பலகையில் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று மாலை சுமார் 3.20 மணியில் இருந்து 4.50 மணி வரை கோவை மத்திய சிறையில் வெடிமருந்து தடுப்பு காவல் ஆய்வாளர்கள் மோகன் பிள்ளை, ராஜேஸ் ஆகியோர் தலைமையில் 31 காவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது சிறையின் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதனால், சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...