திருப்பூர் : திருப்பூரில் வாக்குப்பதிவின் போது பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கே.எஸ்.பழனிசாமி இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவின்போது ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது. இதில், திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்தப் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்து ஆலோசனைகளை வழங்கினார். இந்த பயிற்சி வகுப்பில் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாக்களித்த சின்னத்தைக் காட்டக்கூடிய விவிபேட் இயந்திரத்தினை கையாள்வது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆசிரியரைக் கண்டித்த மாவட்ட ஆட்சியர் :
திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியர் வகுப்பறைக்குள் வந்திருந்த நிலையிலும், அவரை பொருட்படுத்தாமல் போனில் பேசிக்கொண்டிருந்த ஆசிரியரைக் கண்டித்தார். பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய நீங்களே இப்படி நடந்துகொள்ளலாமா..? எனக் கண்டிப்பு காட்டினார்.