கோவை : கழிவுநீர் வாகன ஓட்டிகள் மற்றும் அதன் உதவியாளர்களுக்கான மருத்துவ முகாம் கோவை வடவள்ளியில் நடைபெற்றது.

தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரப் பணிகள் உறுதுணை திட்டத்தின் கீழ் ஈக்குவட்டாஸ் மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் கற்பகம் அறக்கட்டளை மருத்துவமனை சார்பில் கடந்த 27-ம் தேதி இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், கற்பகம் அறக்கட்டளை மருத்துவமனையானது, பொது பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, காது, மூக்கு மற்றும் தொண்டை பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை வழங்கியது. பரிசோதனை முடிவில், பொது மருத்துவர் எலிசபெத் மற்றும் பிசியோதெரபிஸ்ட் துரை ஆகியோர் சிறப்பு மருத்துவ அறிவுரைகளை வழங்கினர். அதோடு, இந்த முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவச மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், இலவச மேல்சிகிச்சைக்கும், அறுவை சிகிச்சைகளுக்கும் கற்பகம் அறக்கட்டளை மருத்துவமனைப் பரிந்துரைக்கப்பட்டது.

"எங்களது உடல் ஆரோக்கியத்தைக் கண்காணித்து கொள்ள இந்த மருத்துவ முகாம் பெரிதும் உதவியாக இருந்தது. நான் எங்களது சங்கம் முழுவதும் இந்த வார்த்தையைப் பகிர்ந்து கொள்வேன்," என்கிறார் அண்ணாமலை செப்டிக் டேங்க் கிளீனிங் சர்வீசஸின் உரிமையாளர் இமயவேல்.