கோவை : மேட்டுப்பாளையம் அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி கீழே விழுந்த இருசக்கர வாகனத்தில் சென்ற காதலர்கள், லாரி மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் மணிராஜ் (21). இவர் கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர். கோவையில் உள்ள மற்றொரு தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் வினோதினி (2௦). இவர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர். மணிராஜ் மற்றும் வினோதினி இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
நாளை மணிராஜின் பிறந்த தினம் என்பதால் இருவரும் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கேளிக்கை பூங்காவிற்கு கோவையில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். மேட்டுப்பாளையம் - உதகை நெடுஞ்சாலையில் ஓடந்துறை என்னும் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, இவர்கள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. அதாவது, முன்னாள் செல்லும் காரினை முந்திச் செல்ல முயன்ற மணிராஜ், சாலையின் குறுக்கே வேகத் தடுப்பிற்காக போலீசாரால் வைக்கப்பட்டிருந்த பேரிகாட் எனப்படும் தடுப்பின் மீது மோதி சாலையில் தடுமாறி விழுந்தனர்.
அதேநேரத்தில், எதிரே வந்து கொண்டிருந்த லாரியொன்று இவர்கள் மீது மோதியது. இவ்விபத்தில் பைக்கை ஒட்டி சென்ற கல்லூரி மாணவர் மணிராஜ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். உடன் சென்ற வினோதினி படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தகவல் கிடைக்கப் பெற்றவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மணிராஜின் உடலை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதைத் தடுக்கும் நோக்கில் போலீசாரால் ஆங்காங்கே சாலையின் குறுக்கே இரும்பிலான தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், சீராக வைக்கப்படாத இந்த பேரிகாட் என்னும் தடுப்புகளால்தான் இச்சாலையில் விபத்துக்கள் அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.