கோவை தொகுதி வேட்பாளர்களுடன் பொது பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை

கோவை : கோவை நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கோவை தொகுதி வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடன் தேர்தல் பொது பார்வையாளர் ரேணுஜெய்பால் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் கு. ராசாமணி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.


கோவை : கோவை நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கோவை தொகுதி வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடன் தேர்தல் பொது பார்வையாளர் ரேணுஜெய்பால் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் கு. ராசாமணி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள், முகவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு. ராசாமணி, கோவை நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் ரேணுஜெய்பால் ஆகியோர் கலந்து கொண்டு வேட்பாளர்கள், முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் பாலாஜி, உதவி ஆட்சியர் (பயிற்சி) சினேகா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) நாராயணன், (கணக்குகள்) சேஷாத்ரி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பிரபாகரன், முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் கு. ராசாமணி கூறியதாவது :- இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகளை மதிப்பது அலுவலர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் கடமையாகும், அதன்படி, அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள், பிற கட்சிகளின் கொள்கை, திட்டங்கள் மற்றும் கடந்த கால செயல்முறையை மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தின் போது எடுத்து வைக்க வேண்டும். 

மேலும், வாக்குப்பதிவு நாளன்று எல்லா அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தங்களது அதிகாரப்பூர்வ பணியாளர்கள், முகவர்களுக்கு அடையாள அட்டைகளையும், பேட்ஜ்களையும் அளிக்க வேண்டும். வாக்குச் சாவடிக்கு 200 மீட்டருக்கு அப்பால் வாக்காளர்களுக்கு உதவும் மையத்தினை அமைக்க வேண்டும். இம்மையம் ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள் மற்றும் வெயில், மழை தாக்காத வண்ணம் ஒரு குடை ஆகியவற்றினை மட்டும் கொண்டிருக்க வேண்டும். இம்மையத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அலுவல்சாரா அடையாள சீட்டுகள் வெறும் வெள்ளைத்தாளில் அச்சிடப்பட்டவைகளாக இருக்க வேண்டும். இதில் அரசியல் கட்சியின் சின்னங்களோ, வாசகங்களோ இருக்கக் கூடாது. இம்மையத்தில் இரு நபர்கள் மட்டும் இருக்க வேண்டும். கூட்டம் கூட அனுமதிக்கக்கூடாது. 

இம்மையங்களில் நியமிக்கப்படும் நபர் அதே பகுதிக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் வாக்காளராகவும், புகைப்பட அடையாள அட்டை வைத்திருப்பவராகவும் இருக்க வேண்டும். இதனை தேர்தல் பார்வையாளர் அல்லது தேர்தல் ஆணையத்தினரால் நியமிக்கப்படும் அலுவலர்கள் கேட்கும் போது காண்பிக்க வேண்டும். குற்றப் பிண்னணி உள்ளவர்கள் எவரும் இப்பணிக்கு பயன்படுத்தக் கூடாது. உள்ளுர் காவல்துறையினர் இதுபோன்ற நபர்களின் நடவடிக்கையைக் கண்காணித்து வர வேண்டும். 

வாக்குப்பதிவன்று பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கென்று விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளான, முழு தொகுதிக்கும் தனது சொந்த உபயோகத்திற்கு ஒரு வாகனம் உபயோகப்படுத்தலாம். முழு தொகுதிக்கும் வேட்பாளரின் முகவர் ஒரு வாகனம் பயன்படுத்தலாம். மேலும், வேட்பாளரின் முகவர், தொண்டர்கள் எவரேனும் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு வாகனம் பயன்படுத்தலாம், அவ்வாறு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு ஒற்றை சாளர குழுவிடம் உரிய அனுமதி பெற வேண்டும். அனுமதி ஆணையினை வாகனத்தின் கண்ணாடி பகுதியில் ஒட்டி வைக்க வேண்டும். 

அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், தொண்டர்கள் மற்றும் வேட்பாளரின் அனுதாபிகள் எவரும் வேறு வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது. வாக்குப்பதிவின் போது 4 சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் சேர்த்து 5 நபர்கள் மட்டும் பயணம் செய்யலாம். வேட்பாளர் மற்றும் அவரது முகவருக்கு பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் வேறு நபர்கள் பயணிக்கக் கூடாது. மேற்கண்ட விதிகளுக்குப் புறம்பாக இயக்கப்படும் வாகனங்கள் கைப்பற்றப்படும். தனி நபர் தன் சொந்த வாகனத்தில் தானோ, தனது குடும்பத்தினரோ வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச் செல்லும் போது, வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டர் தூரத்திற்கு அப்பால் வாகனத்தினை நிறுத்த வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகள், போட்டியிடும் வேட்பாளர்கள், டிவி சேனல், கேபிள் நெட்வொர்க், வானொலி மூலம் விளம்பரம் செய்ய விரும்பினால் ஒளிபரப்பு, ஒலிபரப்பு செய்ய உள்ள தினத்திலிருந்து மூன்று தினங்களுக்கு முன்னர் விண்ணப்பம் செய்ய வேண்டும். மற்ற நபர்கள் அல்லது பதிவு செய்யப்படாத கட்சிகள் விளம்பரம் செய்ய விரும்பினால் ஒளிபரப்பு செய்ய உள்ள தினத்திலிருந்து 7 தினங்களுக்கு முன்னர் விண்ணப்பம் செய்ய வேண்டும். விளம்பரம் செய்ய அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பத்துடன் விளம்பர வரைவின் இரு நகல்கள் எலக்ட்ரானிக் குறுந்தகடிலும் மற்றும் சான்றொப்பமிட்ட அதன் மொழி பெயர்ச்சி நகலும் இணைத்து வரப்பெற வேண்டும்,

இவ்வாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள விதிகளை அனைத்து கட்சிகள், அரசியல் பிரமுகர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் என அனைவரும் கடைப்பிடித்து அமைதியான, முறைகேடுகளற்ற தேர்தலை நடத்திட மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்படி கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...