கோவை : கோவையில் ரயிலில் இருந்து தவறி விழுந்த முதியவரை காப்பாற்றிய ரயில்வே துணை கண்காணிப்பாளருக்கு வெகுமதி வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

கோவை ரயில்நிலைய கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் விஜய் சிங் மீனா (35). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிளாட் பார்ம் 1-ல் பணியில் இருந்தார். அப்போது, திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. அந்த ரயில் அங்கிருந்து கிளம்பும்போது, வயதான ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்றார். அப்போது, கால் தவறி விழுந்த அவர் ரயிலில் இழுத்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்த சக பயணிகள் கூச்சலிடவே, இதனைக் கவனித்த கண்காணிப்பாளர் விஜய் சிங் மீனா துரிதமாக செயல்பட்டு அவரை மீட்டார்.
இதனையடுத்து, அவருக்கு அங்கிருந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் துரிதமாக செயல்பட்டு முதியவரின் உயிரைக் காப்பாற்றிய கண்காணிப்பாளர் விஜய் சிங் மீனாவிற்கு ரூ. 500 வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.