கோவையில் நோயாளியின் மகளிடம் மருத்துவர் சில்மிஷம் : பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் மருத்துவர் கைது

கோவை : கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் நோயாளியின் மகளிடம் சில்மிஷம் செய்ததையடுத்து, பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மருத்துவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை : கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் நோயாளியின் மகளிடம் சில்மிஷம் செய்ததையடுத்து, பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மருத்துவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை - அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலை சிக்னல் அருகில் கவுதம் கிளினிக் உள்ளது. இந்த மருத்துவமனையை டாக்டர் ராமலிங்கம் (65) என்பவர் நடத்தி வருகிறார். இவர் இந்த மருத்துவமனையின் சிறுநீரக சிகிச்சை நிபுணராகவும் உள்ளார். இந்த நிலையில், நேற்று இவரிடம் சிறுநீரக பாதிப்பிற்காக சிகிச்சை பெற நோயாளிகள் சிலர் வந்துள்ளனர். அதில், செல்வபுரத்தை சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தன் தாயை சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார். 

அப்போது, மகளின் உடல் பாகங்களை தொட்டு தாய்க்கு இந்த, இந்த இடத்தில் தானே வலி உள்ளது என்று கேட்டு சில்மிஷம் செய்துள்ளார். இதை சுதாரித்துக் கொண்ட அந்த இளம் பெண் மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், சம்பவம் தொடர்பாக கோவை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் சில்மிஷம் செய்த மருத்துவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...