பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும் : மாவட்ட கிறிஸ்துவசபை வலியுறுத்தல்

கோவை : பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும் என மாவட்ட கிறிஸ்துவசபையின் சார்பில் நடந்த சைபர் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் பற்றிய நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

கோவை : பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும் என மாவட்ட கிறிஸ்துவசபையின் சார்பில் நடந்த சைபர் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் பற்றிய நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

அண்மையில் பொள்ளாச்சியில் சமூக வலைதளங்களில் மூலமாக பெண்களை வலையில் வீழ்த்தி பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பத்தை தொடர்ந்து, மாவட்ட கிறிஸ்துவசபையின் சார்பில் சைபர் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆண்கள், பெண்கள் என 400 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் தாக்குதல்களை தடுப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சபர் தாக்குதலில் இருந்து தங்கள எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்து கோவை கிறிஸ்துவ சபையின் பிஷப் திமோதி ரவீந்தர் கூறுகையில், “பெண்கள் முன்னோக்கி வரவேண்டும். தங்களுக்கு நேரும் வன்கொடுமைகள் பற்றி வெளியே தைரியமாக தெரிவிக்க வேண்டும்,” என்றார்.

இதைத்தொடர்ந்து, சிறப்புரையாற்றிய காவல் ஆய்வாளர் ரூபி, பெண்கள் காவலன் ஆப்பை பதிவிறக்கம் செய்து கொண்டு, அவசர காலங்களில் அதனை பயன்படுத்த வேண்டும். இது போன்ற புகார்கள் வரும் போது, போலீசார் முன்னுரிமை கொடுத்து, சம்பந்தப்பட்ட பகுதிக்கு 10 நிமிடங்களில் விரைவார்கள், என அறிவுறித்தினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...