திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தேர்தலில் 12 பேர் போட்டியிட்டிருப்பதாகவும், மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதால், இதுவரை 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் திரும்பப்பெறுவதற்கான நாள் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் தேர்தல் அதிகாரி பழனிச்சாமி பேசியதாவது :- திருப்பூர் மாவட்டத்தில் 12 பேர் போட்டியிடுகின்றனர். அதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் 3 பேர் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் 2 பேர் மற்றும் சுயேட்சைகள் என 12 பேர் போட்டியிடுகின்றனர். மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தியிருந்தால் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என தெரிவித்தார்.