கோவை : நாடாளுமன்ற தேர்தலில் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் காலியாக உள்ள சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர் பட்டியலில் இன்று வெளியிடப்பட்டது. இதில், கோவை மக்களவை தொகுதியில் 14 வேட்பாளர்கள் மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் சின்னங்கள் வெளியிடப்பட்டது. கோவை மக்களவை தேர்தல் பட்டியலில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளுக்கு அவர்களது சொந்த சின்னமே ஒதுக்கபட்டு உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் கோவிந்தனுக்கு யானை சின்னமும், பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னமும், சி.பி.எம். வேட்பாளர் பி.ஆர். நடராஜனுக்கு சுத்தி அரிவாள் சின்னமும் ஒதுக்கப்பட்டு உள்ளது. பதிவு செய்யப்பட்டு உள்ள அரசியல் கட்சிகளான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கல்யாண சுந்தரத்திற்கு கரும்பு விவசாயி சின்னமும், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மகேந்திரனுக்கு டார்ச் லைட் சின்னமும், தமிழ்நாடு இளைஞர் கட்சி வேட்பாளர் மணிகண்டனுக்கு மோதிரமும் வழங்கப்பட்டு உள்ளது.
சுயேட்சை பட்டியலில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளர் அப்பாதுரைக்கு பரிசு பெட்டகம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், கனகசபாபதி என்ற வேட்பாளருக்கு வைரம், கிருஷ்ணன் என்பவருக்கு தென்னம் தோப்பு, தனபால் என்பவருக்கு காலிபிளவர், நடராஜன் என்பவருக்கு கேஸ் சிலிண்டர், புஷ்பானந்தம் என்பவருக்கு தொலைக்காட்சி பெட்டி, பே. ராதாகிருஷ்ணனுக்கு பிஸ்கட், யு.ராதாகிருஷ்ணன் என்பவருக்கு புகைப்படக் கருவி சின்னங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதேபோல, பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் கணேசமூர்த்திக்கு யானை சின்னமும், தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரத்திற்கு உதயசூரியனும், அ.தி.மு.க. வேட்பாளர் சி. மகேந்திரனுக்கு இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டு உள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சனுஜா, கரும்பு விவசாயி சின்னத்திலும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூகாம்பிகை டார்ச் லைட் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
சுயேட்சை வேட்பாளர்களான அன்சாரிக்கு சீர்வளி சாதனமும், கே.என். சண்முகசுந்தரத்திற்குத் தொப்பியும், வி. சண்முகசுந்தரத்திற்கு வெண்டைக்காய், பாலாஜிக்கு ஊன்று கோலும், மாணிக்கவேலுக்கு கேஸ் சிலிண்டரும் ஒதுக்கப்பட்டு உள்ளது. சி.முத்துகுமார் என்பருக்கு பிரஷர் குக்கரும், அ.ம.மு.க. வேட்பாளரான சு. முத்துகுமாருக்கு பரிசு பெட்டகமும் ஒதுக்கப்பட்டு உள்ளது. ராமசாமி என்பவருக்கு தொலைப்பேசியும், ராஜேந்திரன் என்பவருக்கு ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை சின்னமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.