கோவை : நேஷனல் இன்ஸ்டிடீயூட் ஆப் நேட்சுரோபதியின் சார்பில் பல்வேறு பலன்களைத் தரக்கூடிய 3 நாட்கள் யோகா திருவிழா இன்று தொடங்கியது.

மத்திய யோகா மற்றும் நேட்சுரோபதி ஆராய்ச்சி ஆணையத்தின் பங்களிப்புடன் இன்று முதல் 31-ம் தேதி வரை இந்த யோகா நிகழ்ச்சி நடக்கிறது. இது குறித்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "குறிப்பாக, இளைஞர்கள் உள்பட அனைத்து வயது தரப்பினரும் யோகா செய்வதன் மூலம் நோய் தடுப்பு மற்றும் பல்வேறு முழுமையான பலன்களைப் பெற முடியும். இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய ஆன்மீக முறையை உலகளவில் கொண்டு செல்ல மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் யோகாவின் நன்மைகள் பற்றி விளம்பரப்படுத்த இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன," என்றனர்.