பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கு பிரஷர் குக்கர் சின்னம்

கோவை : நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் சுயேட்சைகளாகவே கருதப்படுவார்கள் என்ற நிலையில், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டுள்ள அ.ம.மு.க., வேட்பாளரின் பெயரைக் கொண்ட மற்றொரு சுயேட்சைக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

கோவை : நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் சுயேட்சைகளாகவே கருதப்படுவார்கள் என்ற நிலையில், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டுள்ள அ.ம.மு.க., வேட்பாளரின் பெயரைக் கொண்ட மற்றொரு சுயேட்சைக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில், கோவை மக்களவை தொகுதியில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் பெயரை கொண்ட இரண்டு சுயேட்சைகளும், சி.பி.எம். வேட்பாளர் நடராஜன் பெயரில் மற்றொரு சுயேட்சையும் போட்டியிடுகின்றனர். 

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அவர்களுக்கு சொந்தமான சின்னத்தில் போட்டியிடுகின்றனர். சுயேட்சைகளுக்கு வைரம், தென்னந்தோப்பு, காலிபிளவர், வாயு சிலிண்டர், தொலைக்காட்சி பெட்டி, பிஸ்கட் மற்றும் புகைப்படக் கருவி உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அ.ம.மு.க., கேட்ட பிரஷர் குக்கர் சின்னம் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை.

இதேபோல, பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில், அ.ம.மு.க. வேட்பாளர் சு. முத்துக்குமார் போட்டியிடும் நிலையில், சுயேட்சை வேட்பாளர் சி. முத்துக்குமார் என்பருக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அ.ம.மு.க., சுயேட்சை பட்டியலில் உள்ள நிலையில், அதே பெயரை கொண்ட மற்றொரு சுயேட்சைக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. 

வேட்பாளர் பட்டியலில் அடுத்தடுத்து ஒரே பெயரை கொண்டவர்களுக்கு குக்கர் மற்றும் பரிசு பெட்டகம் கொண்ட சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், அ.ம.மு.க. வெற்றியை பறிக்கும் வகையில் திட்டமிட்டு சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அ.ம.மு.க.,வினர் கருத்து தெரிவித்து உள்ளனர். 

தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரம் பெயரைக் கொண்ட இரண்டு சுயேட்சைகளும் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...