கோவை : ஆலந்துறை அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற 62 வயதுடைய முதியவர் காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் ஆலந்துறை காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட முல்லாங்காடு வீரகாளியம்மன் கோவில் அருகே உள்ள ஆற்றில், உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த குமாரசாமி (62) என்ற முதியவர் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த காட்டு யானை அவரை தாக்கியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த முதியவர் குமாரசாமி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதேபோல, மாங்கரையில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த சின்னராஜ் என்பவர் காட்டெருமை தாக்கியதில் பலத்த காயமடைந்தார். பின்னர், அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனிடையே, மனித - வனவிலங்கு மோதலை தவிர்க்க, வனப்பகுதிகளுக்கோ அல்லது நீர்நிலைகளுக்கோ செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.