கோவை : கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்ட வனப்பகுதிகளில் உள்ள பசுமை வளங்களை அழிக்கும் விதமாக அடிக்கடி காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்ட வனப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. எனவே, இதனை தடுக்க வனத்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், கடந்த இரண்டு தினங்களாக கோவை மாவட்ட வனப்பகுதியில் காட்டுத் தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. இது, தொடர்ச்சியாக 3-வது காட்டுத்தீ விபத்தாகும்.

நேற்று இரவு நரசிபுரம் மலைப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வந்த நிலையில், தடாகம் பகுதியில் உள்ள தூமனூர் மலைக்கிராம வனப்பகுதியில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. கோவை வனப்பகுதிக்குட்பட்ட இந்தப் பகுதியில் பற்றி எரிந்து வரும் இந்த தீயை வனத்துறையினர் இன்று காலை முதல் போராடி அணைக்கத் தொடங்கினர். இந்த தீவிபத்தில் வனவிலங்குகளுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாவிட்டாலும், கடந்த இரண்டு மாதங்களாக பசுமையான வளங்கள் நாசமாகி வருகின்றன. நூற்றுக்கணக்கான மரங்கள் இந்தத் தீயில் கருகி போய்விட்டன.
"கோவை வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், மழைப் பொழிவு இருந்தால், செடிகள் புத்துயிர் பெற ஆரம்பிக்கும்," என்றனர் வனத்துறையினர்.