கோவை : சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜனிடம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரங்களை ஓரம் கட்டிவிட்டு, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட கோவையைச் சேர்ந்த 7 வயது சிறுமியின் குடும்பத்தினரை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அந்தக் குடும்பத்திற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தருவதாக அவர் உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜனை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, பாலியல் வன்கொடுமையால் சிறுமியை இழந்த குடும்பத்திற்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்றும், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் பெயர் மற்றும் விபரங்களை வெளியிட்டால் மக்களிடம் எஸ்.பி. பாண்டியராஜன் நன்பெயரை இழந்துள்ளார். எனவே, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளை கைது செய்வதன் மூலம் மக்களிடம் மீண்டும் நன்மதிப்பை பெற முடியும் என கமல்ஹாசன் அறிவுறுத்தினார்.
பின்னர், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தண்டனை பெற்றுத் தருவது தனது கடமை என்றும், குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கமல்ஹாசனிடம் எஸ்.பி. பாண்டியராஜன் உறுதியளித்துள்ளார்.