நீலகிரி : நீலகிரியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மேடையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசிக்கொண்டிருந்த நிலையில், மற்றொருபுறம் தயாராகிக் கொண்டிருந்த பிரியாணிக்காக அ.தி.மு.க. தொண்டர்கள் கூட்டத்தை புறக்கணித்து சென்ற சம்பவம் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

நீலகிரி மக்களவை தொகுதி வேட்பாளர் தியாகராஜனின் அறிமுகக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது :- சாதிக் பாட்சா இறந்ததற்கு மு.க. ஸ்டாலின், ராசா தான் காரணம். நாட்டை பாதுகாப்பது நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி. எம்.ஜி.ஆர். மத்தியில் யார் ஆட்சி அமைத்தாலும், கூட்டணி அமைத்துக் கொள்வார். அப்போதுதான் நலத்திட்டங்கள் பெற முடியும்.

இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணம் தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கருணாநிதி. ராசாவிற்கு அமைச்சர் ஆக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. அவர் பெரம்பலூரை விட்டு ஏன் இங்கு வந்து தேர்தலில் நிற்க வேண்டும். நீலகிரியில் வெற்றி பெறுவது அ.தி.மு.க.,வின் மானப் பிரச்சினையாகும். அம்மாவின் மாவட்டம் நீலகிரி மாவட்டம். எதிரிகள் மற்றும் துரோகிகள் இந்த ஆட்சியை மாற்றப் பார்க்கிறார்கள். ஒரே குடும்பமாய் உழைத்தால் வெற்றி நிச்சயம். மத்தியில்
மக்களவை தேர்தல் முடிந்ததும், உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரும். கழகத்தை மீட்டெடுத்து விட்டோம். இனி கழகத்தை காக்க வேண்டும். அ.தி.மு.க. வேட்பாளர் 3 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார், என்றார்.

பிரியாணியால் சலசலப்பு :
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற அ.தி.மு.க. மக்களவை வேட்பாளர் தியாகராஜனின் அறிமுகக் கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார். அப்போது, அவரது மேடைப் பேச்சு நடந்து கொண்டிருந்தபோது, அங்கே பிரியாணி தயாராகி விட்டதாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க.,வினர் பலர் அங்கு முண்டியடித்துக் கொண்டு பிரியாணி சாப்பிட சென்றதால் கட்சியினரிடையே அதிருப்தியடைந்தனர்.