வேட்புமனு பரிசீலனையில் பாரபட்சம் : திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் விமானப் படை வீரர் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர் : வேட்பு மனு பரிசீலனையில் பாரபட்சம் காட்டப்பட்டதாகக் கூறி, வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட முன்னாள் விமானப் படை வீரர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : வேட்பு மனு பரிசீலனையில் பாரபட்சம் காட்டப்பட்டதாகக் கூறி, வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட முன்னாள் விமானப் படை வீரர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக கார்கில் போராளியும், முன்னாள் விமானப் படை வீரருமான அந்தியூரை பூர்வீகமாக கொண்ட செல்வராமலிங்கம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 27-ம் தேதி பரிசீலனைக்கு 11 மணிக்கு திருத்தம் செய்து தரவேண்டும் என அறிவித்திருந்தனர். காலை 10.30 மணிக்கே தான் வந்த போதும், அதிகாரிகள் இல்லாததால் திருத்தம் செய்து தரமுடியாமல் போனது. 11 மணிக்கு தொடங்குவதாக அறிவித்திருந்த பரிசீலனை கூட்டம் 12 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கிய உடனே உள்நோக்கத்துடனே தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனவே, இது குறித்து தமிழக தேர்தல் ஆணையத்தில் மின் அஞ்சல் மூலமாக புகார் செய்துள்ளேன், எனத் தெரிவித்தார்.



இதைத் தொடர்ந்து, இன்று தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைக் கண்டித்து தனி ஒருவராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் விமானப் படை வீரர் செல்வராமலிங்கம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். தூத்துக்குடியில் கனிமொழி மற்றும் தமிழிசை வேட்புமனுக்கள் நேரமெடுத்து பெறப்படும் போது, எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், எனது வேட்புமனுவை நிராகரித்தால், அவர்களது வேட்புமனுக்களையும் நிராகரிக்க வேண்டும் அல்லது எனது வேட்புமனுவை ஏற்க வேண்டும் என அவர் கூறினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...