கோவை : தூமனூர், செம்புக்கரை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் 3 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளுக்கான பணிகளை விரைந்து முடிக்க கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை நகரில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தடாகம் வனப் பகுதியில் தூமனூர், செம்புக்கரை மற்றும் காட்டுசாலை (மிளகாயம்பதி) உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளன. அண்மையில் வெளியிடப்பட்ட வாக்காளர்கள் கணக்கெடுப்பில், 159 ஆண்கள், 172 பெண்கள் என 331 வாக்காளர்கள் இந்த கிராமங்களில் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் இருப்பவர்களும் வரும் 18-ம் தேதி தங்களது வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர்.
இந்த நிலையில், வீரபாண்டி பஞ்சாயத்து, சின்னஜம்புகண்டி, கொண்டனூர் மற்றும் ஆனைகட்டி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு. ராசாமணி மற்றும் கோவை தொகுதிக்கான தேர்தல் கண்காணிப்பாளர் ரெனு ஜெய்பால் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை அவர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, தூமனூர், செம்புக்கரை மற்றும் காட்டுசாலை (மிளகாயம்பதி) ஆகிய குக்கிராமங்களில் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பசுமை வீடுகள் திட்டப் பணிகளை பார்வையிட்டார். 3 ஆண்டுகளாகியும் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 44 வீடுகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இதுவரை ஒரு வீடும் கட்டி முடிக்கவில்லை. இதையடுத்து, இது தொடர்பான பொறுப்பு அதிகாரிக்கு, பசுமை வீடுகளை விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேரடி உத்தரவை பிறப்பித்தார்.
மேலும், தெரு விளக்குகள், சீரான குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை நிவர்த்தி செய்து தருமாறு அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட ஆட்சியர், இன்னும் சில தினங்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றுத் தருவதாக உறுதியளித்தார்.