தேர்தல் ஆணையத்தின் இணையதளம் முறையாக செயல்படாமல் இருப்பதால், ஜனநாயக நாட்டில் நேர்மையான தேர்தலை நடத்துவதில் இந்திய தேர்தல் ஆணையம் தோல்வியடைந்துவிட்டதாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் எம். ஸ்ரீதர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், முக்கிய இடங்களில் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரச்சாரத்திற்கும், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான அனுமதியை ஆன்-லைனில் பெற்றுக் கொள்ளும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளம் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் எம். ஸ்ரீதர் கூறியதாவது :- டெல்லியில் சர்வர் பிரச்சனையால் ஆன்-லைன் அனுமதி கோரும் செயல்பாடு தடைபட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இதனால், எங்களால் சட்டவிதிகளுக்குட்பட்டு பிரச்சாரம் மேற்கொள்ள முடியவில்லை. எழுத்துப்பூர்வமாக சில விவகாரங்களில், மாநில அதிகாரிகளிடம் இருந்து தடையில்லா சான்று வாங்குவது எளிதான விஷயம் அல்ல. இந்தத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஏற்பட்டுள்ள தோல்வியின் பயத்தால், எங்களது கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பிரச்சாரப் பயணத் திட்டத்திற்கு மாநில அரசும், தேர்தல் ஆணையமும் முட்டுக்கட்டை போட முயற்சிக்கிறது.
இருப்பினும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கான தேர்தல் அலுவலகத்தில் பிரச்சார வாகனத்திற்கான அனுமதி வாங்கப்பட்டது. ஒருவேளை, இதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்திருந்தால், காந்தி வழியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே அமர்ந்து மாபெரும் போராட்டத்தை நடத்தி இருப்பேன். ஆன்லைன் முறை செயலற்று கிடப்பதன் மூலம், ஜனநாயக நாட்டில் நேர்மையான தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணையம் தோல்வியடைந்து விட்டது, என்றார்.