போட்டோவிற்கு போஸ் கொடுக்க மைக்கை இரவல் வாங்கிய த.மா.கா இளைஞரணி தலைவர்

கோவை : பத்திரிக்கையாளரிடம் இருந்த மைக்கை இரவல் வாங்கிய த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜ், செய்தித்தாள்களுக்கு புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்த சம்பவம் செய்தியாளர்களிடம் இடையே நகைப்பை ஏற்படுத்தியது.


கோவை : பத்திரிக்கையாளரிடம் இருந்த மைக்கை இரவல் வாங்கிய த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜ், செய்தித்தாள்களுக்கு புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்த சம்பவம் செய்தியாளர்களிடம் இடையே நகைப்பை ஏற்படுத்தியது.

கோவை ஆடிஸ் வீதியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். இதையடுத்து செய்திதாள்களுக்கு புகைப்படம் எடுக்க போஸ் கொடுக்க சொல்லி, புகைப்பட கலைஞர்கள் கூறினார். தொடர்ந்து, மைக்கில் பேசுவது போல போஸ் கொடுக்க நினைத்தார் யுவராஜ். 

ஆனால், கட்சி அலுவலகத்தில் மைக் இல்லாததால், செய்தியாளர் ஒருவரிடம் இருந்து மைக்கினை கேட்டார். பின்னர், லோகோவை கழற்றி விட்டு கொடுத்த டம்மி மைக்கில் உரையாற்றுவது போல, போஸ் கொடுத்தார். அது டம்மி மைக் என தெரியாதவாறு, போட்டகிராபர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர். பின்னர் நன்றி கூறிவிட்டு, மைக்கினை யுவராஜ் செய்தியாளரிடம் திரும்பக் கொடுத்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...