பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளிடம் அதிகளவில் ஆட்டிசம் பாதிப்பு

கோவை : பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே அதிக அளவில் ஆட்டிசம் பாதிப்பிற்கு உள்ளாவதாக ஆட்டிசம் அண்டு பியாண்ட் அமைப்பின் நிறுவனர் தீபா மாலினி தெரிவித்தார்.

கோவை : பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே அதிக அளவில் ஆட்டிசம் பாதிப்பிற்கு உள்ளாவதாக ஆட்டிசம் அண்டு பியாண்ட் அமைப்பின் நிறுவனர் தீபா மாலினி தெரிவித்தார்.

ஆண்டுதோறும் உலக ஆட்டிசம் தினம் ஏப்ரல் 2-ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தையொட்டி, ஆட்டிசம் அண்டு பியாண்ட் அமைப்பின் நிறுவனர் தீபா மாலினியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- 2018-ன் ஆய்வின்படி, 59 பேரில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் நோய் பாதிப்பு இருக்கிறது. உலகம் முழுவதும் 70 மில்லியன் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்சினை தொடர்பாக தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இளம்பருவம் முதலே பயிற்சி அளிப்பதன் மூலம், அவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாக மாற்ற முடியும். இதற்கு, பிளோர் டைம் பயிற்சி மூலம் கவனிக்கும் திறனை அதிகரிக்க முடியும். இதன்மூலம், சுயமாக சிந்திக்கும் திறன், விளையாட்டு திறன், மொழித்திறன் மற்றவர்களுடன் இவர்கள் எளிதில் ஒருங்கிணைய இப்பயிற்சி உதவிகரமாக இருக்கும். பெரும்பாலான குழந்தைகள் சிந்திக்கும் திறன் இல்லாமல் சிரமப்படுகின்றனர். 

கனடாவில் வார இறுதி நாட்களில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதால், அவர்களின் குழந்தைகளுடனான தொடர்பு அதிகரித்து உள்ளது. இதனை தங்கள் அமைப்பு செயல்படுத்தி ஆட்டிசம் குழந்தைகளின் மேம்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் நான்கில் ஒரு பங்கு என அதிகளவில் ஆட்டிசம் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர், என்றார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...