கோவை : மேட்டுப்பாளையத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 5 மணல் லாரிகளை மடக்கிப்பிடித்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தென் திருப்பதி நால்ரோடு பகுதியில் போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தார்ப்பாய் மூடிய நிலையில், ஐந்து லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக வருவதை கண்ட போலீசார், சந்தேகமடைந்து அவற்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், லாரி நிறைய ஆற்று மணல் இருந்ததையும், இதற்கான எவ்வித முறையான ஆவணங்கள் அதன் ஓட்டுனர்களிடம் இல்லாதையும் கண்டனர்.
ஏற்கனவே, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ள சந்தையில் மணல் விற்கப்பட்டு வருவது குறித்தும், இவை கரூர் காவிரி ஆற்றில் இருந்து முறைகேடாக அள்ளி வந்து ரகசியமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் புகார்கள் வந்த நிலையில், இந்த லாரிகள் பிடிபட்டுள்ளன. பிடிபட்ட லாரிகளை மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். காவிரியாற்று மணலை கடத்தி வந்து மேட்டுப்பாளையத்தில் உள்ள ரகசிய இடங்களில் பதுக்கி வைத்து, பின்னர் இவை யூனிட் ஒன்று ரூ. 15,000 வரை கள்ள விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்த மணல் திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்ட வருவாய்துறையினர், பிடிபட்ட மணல் லாரிகள் மீது சட்டவிரோத மணல் கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.