சிறுமி மரணம் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி மனு

கோவை : கோவையில் சிறுமி மரணம் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி ஆதிதிராவிடர் நலத்துறை உறுப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை : கோவையில் சிறுமி மரணம் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி ஆதிதிராவிடர் நலத்துறை உறுப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். 

பன்னிமடை பகுதியைச் சேர்ந்த சிறுமி தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா மற்றும் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், தற்போது இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

சிறுமி மரணம் தொடர்பாக கொலை மற்றும் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இந்த சிறுமியின் மரணம் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டம் 2016-ன் கீழ் வழக்குப் பதிவு செய்தால்தான், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும். அதேபோல, சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை, அரசின் சார்பில் இழப்பீடு ஆகியவை கிடைக்கும் என வலியுறுத்தி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆதிதிராவிட நலத்துறையின் மாநில உறுப்பினர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இந்த கோரிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பரிசீலிப்பதாக அவர்களிடம் உறுதி அளித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...