தி.மு.க.வின் துணை அமைப்பாக காங்கிரஸ் மாறிவிட்டது : த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜ் குற்றச்சாட்டு

கோவை : தி.மு.க.,வின் துணை அமைப்பாக காங்கிரஸ் மாறிவிட்டதாகவும், ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்று ஜாமினில் வந்து கார்த்தி சிதம்பரத்திற்கு வாரிசு அடிப்படையில் சீட் வழங்கப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சியின் அழிவின் உச்சகட்டம் என த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை : தி.மு.க.,வின் துணை அமைப்பாக காங்கிரஸ் மாறிவிட்டதாகவும், ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்று ஜாமினில் வந்து கார்த்தி சிதம்பரத்திற்கு வாரிசு அடிப்படையில் சீட் வழங்கப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சியின் அழிவின் உச்சகட்டம் என த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை ஆடிஸ் வீதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமல்படுத்த மாட்டோம் என உறுதி அளித்துள்ளார். உயர் மின்னழுத்த கோபுரங்களுக்கு பதிலாக, புதைவட கம்பிகள் மூலம் மின்சாரம் எடுத்து செல்ல வேண்டும். விவசாயிகள் பிரச்சனையில் அரசியல் சாயம் பூசினால், தி.மு.க., அழிவை சந்திக்கும். தி.மு.க.,வை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள்.

மெகா கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். இருப்பினும், ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயல்படுகிறோம். ஜி.எஸ்.டி. வருங்காலத்தில் நன்மை தரும். சிறுபான்மையினருக்கும், பெரும்பான்மையினருக்கும் இடையேயான பாலமாக த.மா.கா. இருக்கும். 

தி.மு.க.,வின் துணை அமைப்பாக காங்கிரஸ் மாறிவிட்டது. ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்று ஜாமினில் வந்த கார்த்தி சிதம்பரத்திற்கு வாரிசு அடிப்படையில் சீட் வழங்கப்பட்டிருக்கிறது. கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் வழங்கியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு அழிவின் உச்சகட்டம். மேலும், காங்கிரசில் சாதிக்கொரு செயல் தலைவர் என நியமித்து சாதிக்கட்சியாக மாற்றி விட்டனர். 

சினிமா மோகத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். எடப்பாடி பழனிசாமி கிராமத்தில் பிறந்தவர். உதயநிதி ஸ்டாலின் சூட்டிங்களில் கிராம செட்டப்பில் நடித்தவர். அ.ம.மு.க., சின்னமான பரிசு பெட்டகத்தின் உள்ளே பாம்பு இருக்கிறதா..?, தேள் இருக்கிறதா..? என தெரியவில்லை. மதச்சார்பற்ற கூட்டணி என மதத்தை மட்டுமே நம்பி தி.மு.க. கூட்டணி தேர்தலை சந்திக்கிறது, என அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...