கோவை : தேர்தல் பிரச்சாரங்களை ரத்து செய்துவிட்டு, பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று கோவை வருகிறார்.

கோவையில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று கோவை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய மற்றும் வடசென்னை பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள கமல் முடிவு செய்திருந்தார். ஆனால், அந்தப் பிரச்சாரங்களை ரத்து செய்துவிட்டு இன்று கோவை வருகிறார். சுமார், 2 மணியளவில் கோவை விமான நிலையம் வரும் அவருடன், சிறந்த வழக்கறிஞர்களும் வர இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக, கோவையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு சட்டரீதியான அனைத்து உதவிகளையும் மக்கள் நீதி மய்யம் செய்து தரும் என அக்கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.