அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நதிநீர் இணைப்பு சாத்தியமாகும் என்றும், இதனால் விவசாயிகள் பயன்பெற முடியும் என கோவையில் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ஆரை ஆதரித்து பிரச்சாரம் செய்த பிரேமலதா தெரிவித்தார்.
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நதிநீர் இணைப்பு சாத்தியமாகும் என்றும், இதனால் விவசாயிகள் பயன்பெற முடியும் என கோவையில் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ஆரை ஆதரித்து பிரச்சாரம் செய்த பிரேமலதா தெரிவித்தார்.

கோவை கணபதியில் கூட்டணி கட்சியான பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- ஜி.எஸ்.டி. பற்றி கவலைப்பட வேண்டாம். நமது எம்.பி.க்கள் டெல்லி சென்று ஜி.ஸ்.டி.யை மறுபரிசீலனை செய்வார்கள். தி.மு.க. டெபாசிட்டை இழந்து, பா.ஜ.க. வேட்பாளர் மாபெரும் வெற்றி பெறுவது உறுதி. ஏனெனில், செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதத்தை உருவாக்கி, விண்வெளித்துறையில் இதியாவிற்கு தனி இடத்தை உருவக்கிக் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. அனைவருக்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை நன்கு தெரியும். அதுபோல, கோவை மக்கள் சி.பி.ஆரை நன்கு அறிவார்கள். சி.பி.ஆரின் வெற்றி மாநிலத்தில் ஆகும் கட்சிக்கான வெற்றி. மத்தியில் ஆளும் பிரதமர் மோடிக்கான வெற்றி.

40 தொகுதிகளிலும் எங்களது கூட்டணி வெற்றி பெற்றால், நதிகள் இணைப்பு சாத்தியமாகும். இது நமது விவசாயிகளுக்கு அத்தியாவசியமானது. மோடி தலைமையில் ஊழல் இல்லாத ஆட்சி அமைக்கப்படும். தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் அதீத ஊழல் மிகுந்த கட்சிகளாகும். மேலும், நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் மாற்றப்படும். சி.பி.ஆரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்களா...?, என ஜெயலலிதா பாணியில் அவர் மக்களிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், அனைத்து கருத்துக் கணிப்புகளும் பிரதமர் மோடிதான் மீண்டும் வெற்றி பெறுவார் என தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கூட்டணி இதுவரை பிரதமர் வேட்பாளரின் பெயர் கூட அறிவிக்கவில்லை. பிரதமர் மோடிக்கும், ராகுல் காந்திக்கும் இடையே மலைக்கும், மடுவுக்கும் இருக்கும் வித்தியாசமாகும். சி.பி.ஆரின் முகத்தில் மோடி, எம்.ஜி.ஆர்., அம்மா, கேப்டன் ஆகியோரின் முகங்களை நம்மால் பார்க்க முடிகிறது, எனவும் அவர் தெரிவித்தார்.
இறுதியில், புல்வாமா தாக்குதலின் பதில் தாக்கு என்பதற்கு பதிலாக, புல்வாமா தாக்குதல் பிரதமர் மோடியின் தைரியத்தால் மேற்கொள்ளப்பட்டதாக பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.