ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால், பல்லடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 10 கோடி வங்கியிடம் திரும்ப ஒப்படைப்பு

திருப்பூர்: பல்லடம் அருகே தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வங்கிப் பணம் ரூ. 10 கோடி, உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, திரும்ப வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூர்: பல்லடம் அருகே தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வங்கிப் பணம் ரூ. 10 கோடி, உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, திரும்ப வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரடிவாவி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அதில் இருந்தவர்கள் தங்கள் வங்கி ஊழியர்கள் என்றும், வங்கிக்கு பணம் எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து, அவர்களிடம் இருந்த ஆவணங்களை சோதனை செய்தபோது, அதில் கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளையில் இருந்து 2,000 ரூபாய் நோட்டுகள் ரூ. 25,000மும், 500 ரூபாய் நோட்டுகள் ரூ. 88,000-மும், 100 ரூபாய் நோட்டுகள் ரூ. 40,000மும், 50 ரூபாய் நோட்டுகள் ரூ. 40,000-ம் என 10 கோடி ரூபாய் பணம் புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் கொண்டு செல்லப்படுவதாக முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. 

புதுக்கோட்டை மாவட்டத்தை தூத்துக்குடி மாவட்டம் என குறிப்பிடப்பட்டு இருந்ததால், ஆவணங்கள் போலியாக இருக்கலாம் என சந்தேகித்த பறக்கும் படையினர், வாகனத்துடன் 10 கோடி ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்து பல்லடம் வட்டாட்சியர் சாந்தியிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனிடையே, பணம் பறிமுதல் செய்யப்பட்ட தகவலறிந்த வங்கி அதிகாரிகளும், பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஆவணங்களை கொண்டு வந்து சமர்ப்பித்தனர். விரைந்து வந்த வருமானவரித் துறை அதிகாரிகள் 9 மணி நேர சோதனைக்குப் பிறகு, பிடிக்கப்பட்ட பணம் மெர்கன்டைல் வங்கிக்கு சொந்தமானது என்றும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை என்ற ஊர் அதிக அளவில் அறியப்படாததால் ஏற்பட்ட குளறுபடி என்றும் தெரியவந்தது. இதனையடுத்து, வங்கி அதிகாரிகளிடம் 10 கோடி ரூபாய் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் 10 கோடி ரூபாய் கோவை கிளைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டையை புதுக்கோட்டை மாவட்டம் என தவறாக புரிந்து கொண்டதால், 10 கோடி ரூபாய் வங்கி பணம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...