கோவை : வனத்துறையில் இருக்கும் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு, எந்தவித அரசியல் தலையீடுமின்றி வெளிப்படையாக நடைபெற்று வருவதாக வனத்துறை தலைமை செயலாளர் ஷாம்பு கல்லோலிகர் தெரிவித்தார்.

குரும்பபாளையத்தில் உள்ள ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரியில் வன பாதுகாவர் பணிக்கான 6 மாத பயிற்சி வகுப்பை தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் தலைமை செயலர் ஷாம்பு கல்லோலிகர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- வனத்துறையில் இருக்கும் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறுவதால், அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் தலையீடு தடுக்கப்பட்டுள்ளது. வனப் பாதுகாவலர் பணிக்கு ப்ளஸ்2 கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. அதில், 638 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 40 சதவீதம் பேர் என்ஜினியரிங் மாணவர்களும், 10 சதவீதம் முதுகலை மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். 160 வருட பழமையான துறையான வனத்துறையில், வனப்பாதுகாவலர் பணியானது அர்ப்பணிப்பு மற்றும் முழு ஈடுபாடுடன் கூடியதாகும், என்றார்.
முன்னதாக, தலைமை வனப்பாதுகாவலர் எச். மல்லேஷப்பா பேசுகையில், “இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் வேறு மாநிலத்தவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. இது தொடர்பான வனத்துறை அனுப்பிய பரிந்துரைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இது தமிழகத்தில் பணியாற்றுபவர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும்,” என்றார்.