கோவை : மேட்டுப்பாளையம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மேட்டுப்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பிரிவு அருகே பறக்கும் படை (3) அதிகாரி செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் காந்திராஜ் ஆகியோர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியே வந்த சரஸ்வதி (38) என்பவரின் இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ. 4 லட்சத்து 6 ஆயிரத்து 500 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், பறிமுதல் செய்த பணத்தை மேட்டுப்பாளையம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் புனிதாவிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்த பணம் மேட்டுப்பாளையம் சார்நிலை கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. உரிய ஆவணங்களை தேர்தல் அதிகாரிகளிடம் காண்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தனர்.