7 வயது சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை நாளை வெளியாக வாய்ப்பு : மாநில குழந்தைகள் நல ஆணையம்

கோவை : 7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கலாம் எனவும், உடற்கூறாய்வு அறிக்கை நாளை கிடைக்க வாய்ப்பிருப்பதாக மாநில குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் மோகன் தெரிவித்துள்ளார்.


கோவை : 7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கலாம் எனவும், உடற்கூறாய்வு அறிக்கை நாளை கிடைக்க வாய்ப்பிருப்பதாக மாநில குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் மோகன் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் மோகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- பன்னிமடை பகுதியில் 7 வயது சிறுமி கொலை வழக்கு தொடர்பாக காவல் துறையினர், பள்ளி ஆசிரியர்கள், ஊர்மக்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கை நாளை வர வாய்ப்பிருக்கிறது. முழு விபரம் தெரிய வந்த பின்னர், அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்திருக்க வாய்ப்புள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. 

மேலும், இதற்கு முன்னர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்க வாய்ப்பில்லை. உள்ளுர்வாசிகள் மட்டுமின்றி வெளியூர்வாசிகளிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். குற்றவாளிகள் காவல் துறையினர் ஏற்கனவே பிடித்து விசாரணை நடத்தும் நபர்களாகவும் இருக்கலாம். வேறு நபர்களாகவும் இருக்கலாம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ சிறுமியின் பெயர், புகைப்படம் வெளியிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக குழந்தைகள் நல ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும், என தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...