காருண்யா பல்கலை., சார்பில் கோவை மத்திய சிறையில் கணினி ஆய்வகம் திறப்பு

கோவை : காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் விரிவாக்க கல்வித்துறை சார்பாக மத்திய சிறையில் கைதிகள் கணினி அறிவினை வளர்த்துக் கொள்ளும் விதமாக, கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டது.

கோவை : காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் விரிவாக்க கல்வித்துறை சார்பாக மத்திய சிறையில் கைதிகள் கணினி அறிவினை வளர்த்துக் கொள்ளும் விதமாக, கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டது. 



கடந்த ஆண்டு மகாத்மா காந்தியடிகளின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு காருண்யா பல்கலைக்கழக அவுட்ரிச் கிளப் மாணவர்கள் சார்பில் சிறைக் கைதிகளுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அப்போது, கணினி அறிவை வளர்த்துக் கொள்ள ஆய்வகம் தேவை என சிறைக் கைதிகள் விரும்பினர். அதனை ஏற்று, காருண்யா பல்கலைக்கழகம் சார்பில் ஒரு கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இதன் திறப்பு நேற்று நடைபெற்றது.



இதில், காருண்யா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, வரும் நாட்களில் காருண்யா பல்கலை சார்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் கணினி சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்யப்படும், என்றார். பின்னர், கணினி மற்றும் பல்வேறு அறிவுரை புத்தகங்களையும், 50 இருக்கைகளையும் அவர் வழங்கினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...