கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தல் போட்டியில் இருந்து விலகிய 2 சுயேட்சை வேட்பாளர்கள்

கோவை : கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்றனர்.

கோவை : கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்றனர்.

17-வது நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதோடு, காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது. நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர்கள் குறித்த தகவலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். கோவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 38 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர். தகுதியின் அடிப்படையில் 15 பேருடைய விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 23 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதேபோல, பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் 41 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தகுதியின் அடிப்படையில் 17 பேருடைய மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு 24 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்த நிலையில், வேட்பு மனு வாபஸ் பெற இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த சுயேட்சை வேட்பாளர் ராமலிங்கம் இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதேபோல, பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு.மனு தாக்கல் செய்திருந்த சுயேட்சை வேட்பாளர் சுகுமார், தனது மனுவை திரும்பப் பெற்றார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...