மக்கள் நீதி மய்யம் சார்பில் 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு சட்டரீதியான உதவிகள் : துணைத் தலைவர் மகேந்திரன்

கோவை : கோவையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு சட்டரீதியான அனைத்து உதவிகளையும் மக்கள் நீதி மய்யம் செய்து தரும் என அக்கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு சட்டரீதியான அனைத்து உதவிகளையும் மக்கள் நீதி மய்யம் செய்து தரும் என அக்கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் பேசியதாவது :- பெண்கள் மீதான பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில், பன்னிமடையைச் சேர்ந்த 7 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவை மக்களை அடுத்தடுத்து அதிர்ச்சியில் உள்ளது. ஒவ்வொரு முறையும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இது போன்ற சம்பவங்களுக்கு அரசியல்வாதிகள் கண்டனக் குரல்களை எழுப்பினாலும், விசாரணை மற்றும் நீதியில் தோல்வியே ஏற்படுகிறது. குறிப்பாக, இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன என்பதே தெரியாமல் போய்விடுகிறது. 

திறமையற்ற அரசியல் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீடுகளால், பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் தற்போது இல்லை. மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதைப் போல செயல்பட்டு, இதுபோன்ற பிரச்சனைகள் இனிமேல் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், மக்கள் நீதி மய்யம் மற்றும் எங்களின் மகளிர் அணியும் செயல்பட்டு வருகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு சட்ட ரீதியாகவும், உளவியல் ரீதியான ஆதரவை அளிக்கத் தயாராக இருக்கிறோம். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் எங்களது குழுவினரை தொடர்பிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். அதோடு, மாவட்டத்தில் சிறந்த வழக்கறிஞரை தேர்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுப்போம். 

 

இந்த கொடூரமான செயலுக்குக் கடுமையான கண்டத்தை நாங்கள் தெரிவிக்கிறோம். காவல்துறையின் மெத்தனம், அரசியல்வாதிகளின் குறுக்கீடு போன்றவற்றினால், குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படாமலேயே இருந்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் வெறும் வாய் பேச்சு மட்டுமல்லாது, தண்டனையை உறுதி செய்யும் வகையில், முழு சட்ட உதவிகளை அளிக்க வேண்டும், என்றார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...