வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புகைமூட்டம் தடுப்பு பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

கோவை : வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தீ அணைக்கும் பணிகளைத் தொடர்ந்து, புகைமூட்டம் ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி ஆய்வு செய்தார்.

கோவை : வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தீ அணைக்கும் பணிகளைத் தொடர்ந்து, புகைமூட்டம் ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி ஆய்வு செய்தார். 

கோவை மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கடந்த சனிக்கிழமை (மார்ச் 23) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று அதிகமாக இருந்ததால் தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிந்தது. இதைத் தொடர்ந்து, 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் வாகனங்களுடன் தீ அணைக்கப்பட்டது. மேலும், வெப்ப அழுத்தத்தால் புகை மூட்டம் அதிகமானதால், குப்பைக்கிடங்கின் பாதிப்பினை சூலூர் விமானப்படையினைச் சேர்ந்த ஹெலிகாப்டரை பயன்படுத்தி தீ கட்டுப்படுத்தப்பட்டது. 

இந்த நிலையில், வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தீ அணைக்கும் பணிகளைத் தொடர்ந்து, புகைமூட்டம் ஏற்படாமல் இருக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் ச. பிரசன்னா ராமசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) எஸ். சினேகா ஆகியோர் உடனிருந்தனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...