"வறுமையை ஒழிக்க உதயமாகட்டும் உதயசூரியன்" : பொள்ளாச்சி தி.மு.க., வேட்பாளர் கு. சண்முகசுந்தரம் பேச்சு

கோவை : வறுமையை ஒழிக்கவும், பெண்கள் பாதுகாப்பு கருதியும் மக்கள் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும் என பொள்ளாச்சி தி.மு.க., வேட்பாளர் கு. சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

கோவை : வறுமையை ஒழிக்கவும், பெண்கள் பாதுகாப்பு கருதியும் மக்கள் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும் என பொள்ளாச்சி தி.மு.க., வேட்பாளர் கு. சண்முகசுந்தரம் தெரிவித்தார். 

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கு.சண்முக சுந்தரம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். மடத்துக்குளத்தில் வாக்கு சேகரித்தபோது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மடத்துக்குளம் அரசு மருத்துவமனை, உயர்தர சிகிச்சை பெறும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அமைத்துத் தரப்படும். மடத்துக்குளம் பேருந்து நிலையம் விரிவுபடுத்தப்படும். மேலும், ஏழை எளியவர்களின் பொருளாதாரத்தை உயர்த்திட மடத்துக்குளம் பகுதியில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுப்போம்.



தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி, விவசாயக்கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து செயல்படுத்தப்படும். தற்போதைய கேஸ் விலை அபரிமிதமாக உயர்ந்து அனைத்து மக்களும் சிரமத்தில் உள்ளனர். எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் விலை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வேலையற்ற பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு மத்திய அரசு மற்றும் மத்திய அரசுசார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். 

கேபிள் கட்டணம் தற்போதைய ரூ. 300-லிருந்து பழையபடி குறைந்த விலைக்குக் கொண்டுவரப்படும். முன்பே 32 கோடி மதிப்பீட்டில் திருமூர்த்திமலை கூட்டுக்குடிநீர் திட்டத்தை அமைத்துத் தந்தது நமது தி.மு.க., தான். அ.தி.மு.க.,வின் எடப்பாடி அரசு விவசாயிகள் நலனில் எவ்வித அக்கறை இல்லாமல் உள்ளது. பொள்ளாச்சியில் அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களைந்து குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கவும், பெண்கள் பாதுகாப்பு கருதியும் மக்கள் உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும், என்று கூறினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...