நீலகிரி : வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்வதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று உதகையில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்வதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று உதகையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்வதன் அவசியம் குறித்து மாணவ, மாணவிகள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவ, மாணவிகள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.