ரபேல் விமான ஊழலை சுட்டிக்காட்டும் விதமாக விமான வடிவமைப்புள்ள சி.பி.எம். பரப்புரை வாகனம்

கோவை : பா.ஜ.க., ஆட்சியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ரபேல் விமான ஊழலை சுட்டிக்காட்டும் விதமாக விமான வடிவமைப்புள்ள பரப்புரை வாகனத்தில் தி.மு.க. கூட்டணியின் சி.பி.எம். பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

கோவை : பா.ஜ.க., ஆட்சியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ரபேல் விமான ஊழலை சுட்டிக்காட்டும் விதமாக விமான வடிவமைப்புள்ள பரப்புரை வாகனத்தில் தி.மு.க. கூட்டணியின் சி.பி.எம். பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. 

17-வது நாடாளுமன்ற தேர்தல் 2-வது கட்டமாக வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பிரதான கட்சிகள் உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் அதிகளவில் வேட்பு மனு அளித்திருந்தனர். வேட்பு மனுக்கள் இன்றும், நாளையும் வாபஸ் பெற தேர்தல் ஆணையம் இரண்டு நாட்களை ஒதுக்கியுள்ளது. முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பரப்புரையை தொடங்கி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க., கூட்டணி கட்சியின் சி.பி.எம். வேட்பாளர் பி.ஆர். நடராஜன் நேற்று தனது பிரச்சாரத்தை விமான வடிவிலான வாகனத்தில் தொடங்கினார். பா.ஜ.க.,வின் ரபேல் விமான ஊழலை எளியவரும் புரிந்துகொண்டு, சுத்தி அரிவாள் நட்சத்திர சின்னத்தில் வாக்களிக்க செய்ய வேண்டுமென்பதற்காக விமான வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, இரண்டாவது நாளாக தெப்பகுள மைதானம், மரக்கடை, லிங்கப்ப செட்டி வீதி, தியாகராய புது வீதி உள்ளிட்ட இடங்களில் வாக்குசேகரிப்பு மேற்கொண்டார். அப்போது, பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரியால், பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு,குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டது. கோவையில் இருந்த மத்திய அரசு நிறுவனங்கள் மூடப்பட்டது. வேலை வாய்ப்பின்மைதான் மத்திய அரசின் சாதனைகள் என குற்றம்சாட்டிய பி.ஆர் நடராஜன், மூடப்பட்ட தொழிற்கூடங்களை திறக்கவும், ஜி.எஸ்.டி. வரியை குறைக்கவும் நடவடிக்கை எடுப்போம், என வாக்குறுதி அளித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...