கோவை: ஏப்ரல் 18. அடுத்த ஐந்து ஆண்டுகளை தீர்மானிக்கும் நாள். அதற்கு இன்னும் 20 நாட்களே எஞ்சியுள்ளன. இதனால் தேர்தல் களத்தில் நாளுக்கு நாள் விறுவிறுப்பும், பரபரப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது. அரசியல் கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன.

கோவை மக்களவை தேர்தல் களத்தில் 15 வேட்பாளர்கள் உள்ளனர் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட 30 வேட்பாளர்கள் 38 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதில் 23 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டனர். 15 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில் பகுஜன்சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக ஆகிய 3 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களும், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், தமிழ்நாடு இளைஞர் கட்சி ஆகிய 3 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களும் உள்ளனர். 9 சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். குக்கர் சின்னம் கிடைக்காத அமமுகவும், சுயேட்சை வேட்பாளர் பட்டியலில் உள்ளது.

கோவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை, கடந்த இரண்டு தேர்தல்களை காட்டிலும் குறைந்துள்ளது. 2009 ம் ஆண்டு தேர்தலில் 25 வேட்பாளர்களும், 2014 தேர்தலில் 25 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். ஆனால் இம்முறை 15 வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன.

இதேபோல பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட 31 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு, 14 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டனர். ஏற்கப்பட்ட மனுக்களில் பகுஜன்சமாஜ், திமுக, அதிமுக ஆகிய 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும், நாம்தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய 2 பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் உள்ளன. அமமுக உள்ளிட்ட 12 சுயேட்சைகளும் இருக்கின்றனர். 2009 தேர்தலில் 22 வேட்பாளர்களும், 2014 தேர்தலில் 18 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இந்த தொகுதியிலும் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை வரை கால அவகாசம் இருப்பதால், சிலர் வாபஸ் பெறவும் வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் மேலும் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறையும். நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போது, போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை உறுதியாகும்.
வாக்காளர்களை குழப்பும் வேட்பாளர்கள்
ஒவ்வொரு தொகுதியிலும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின் பெயரில், பல சுயேட்சைகளும் களமிறங்குவது வழக்கம். வாக்காளர்களை குழப்பவும், வாக்குகளை பிரிப்பதற்கும் இவர்களை சில கட்சிகளே ஊக்குவித்தும் வருகின்றனர். சில சுயேட்சைகள் வியம்பரத்திற்காகவும், பணத்தை பெற்று ஒதுங்குவதற்கும் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்வதும் உண்டு. இப்படி ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் எதொவொரு ஆதாய நோக்கத்தில் போட்டியிடுகின்றனர்.

கோவை தொகுதியில் ராதாகிருஷ்ணன் என்ற பெயரில் 3 வேட்பாளர்களும், நடராஜன் என்ற பெயரில் 2 வேட்பாளர்களும் உள்ளனர். பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடும் நிலையில், பி.ராதாகிருஷ்ணன், யு.ராதாகிருஷ்ணன் என்ற 2 சுயேட்சைகள் உள்ளனர். மார்க்சிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் போட்டியிடுவதால், ஏ.நடராஜன் என்ற ஒரு சுயேட்சை நிற்கின்றார்.

பொள்ளாச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் கு.சண்முக சுந்தரம். சுயேட்சையாக வி.சண்முகசுந்தரம் என்பவர் இடம் பெற்றுள்ளார். சுயேட்சையாக போட்டியிடும் அமமுக வேட்பாளர் சு.முத்துகுமார் இருக்க, சி.முத்துக்குமார் என்ற சுயேட்சையும் போட்டியிடுகிறார். ஆனால் அதிமுக வேட்பாளர் மகேந்திரன் பெயரில் வேறு யாரும் போட்டியிடவில்லை.
பெயர் குழப்பங்கள் வாக்காளர்களை குழப்பக்கூடும். ஆனால் சின்னம் பார்த்து வாக்களிக்கும் மக்கள், குழம்ப வாய்ப்பில்லை!