கோவையில் ஓடும் ரயிலில் பெண்களிடம் சில்மிஷம் செய்த தி.மு.க. நிர்வாகி கைது

கோவை: ஓடும் ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில், இருகூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகியை ரயில்வே போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: ஓடும் ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில், இருகூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகியை ரயில்வே போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை இருகூர் பகுதியை சேர்ந்த சந்திரன். அதேபகுதியில், கடந்த 15 ஆண்டுகளாக பேரூராட்சி தலைவராக பதவி வகித்தவர். மேலும், இவர் தி.மு.க.வில் இருகூர் பகுதியின் பொறுப்பாளராகவும், செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 8-ம் தேதி சென்னையில் நடைபெற்ற தி.மு.க. தேர்தல் நேர்காணலுக்கு சென்றுவிட்டு, கோவை திரும்பும் வழியில் ரயிலில் பயணம் செய்த சக பெண்களிடம் சில்மிஷம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பெட்டியில் பயணம் செய்த பெண்கள்கூச்சலிடவே, பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளார். அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சந்திரன் மற்றும் சன் ராஜேந்திரன் மற்றும் மூன்று பேர் தவறுதலாக நடந்து விட்டதாகக் கூறி , ரயில்வே போலீஸாரிடம் எழுதிக்கொடுத்துவிட்டு சமாதானம் செய்துவிட்டு கோவை வந்துள்ளனர். 



இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, சென்னையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாகக் கூறி சேலம் ரயில்வே போலீசார் மற்றும் சூலூர் போலீசார் சந்திரனை சூலூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் வைத்து கைது செய்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...