பிரதமர் வேட்பாளர் மோடி, ராகுல்காந்தி என்பது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் : திருப்பூரில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

திருப்பூர் : பிரதமர் வேட்பாளர் மோடி, ராகுல்காந்தி என்பது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

திருப்பூர் : பிரதமர் வேட்பாளர் மோடி, ராகுல்காந்தி என்பது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். 

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.எம்.எஸ். ஆனந்தனை ஆதரித்து தே.மு.தி.க. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.



அப்போது அவர் பேசியதாவது : இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். இது போன்ற கூட்டணி அமைந்ததில்லை. இது வெற்றி கூட்டணி, மெகா கூட்டணி. எதிரணியை சேர்ந்த தி.மு.க.வினர் இந்த கூட்டணி அமையக் கூடாது என பல சூழ்ச்சிகளை செய்தனர். ஆனால், வெற்றி கூட்டணி அமைந்துள்ளது. இந்தக் கூட்டணி ஆட்சியமைக்கும்பட்சத்தில், நதிகள் இணைப்பு திட்டத்தை முதன்மை திட்டமாக செயல்படுத்த பாடுபடுவோம். ஜி.எஸ்.டி.யால் பாதிக்கப்பட்ட தொழில்துறையினர் பாதிக்காத வகையில், அதன் சதவீதம் குறைக்கப்படும். ஊழல்களின் மொத்த உருவம் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி. தமிழ் இன படுகொலைக்கு காரணமான தி.மு.க. கூட்டணிக்கு ஒரு ஓட்டு கூட இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். 

எதிரணியில் பாரத பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லமுடியுமா..?. ராகுல்காந்தி வருவார் என்று சொல்கிறார்கள். மோடியும், ராகுல்காந்தியும் என்பது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம். திருப்பூர் தொகுதியை தே.மு.தி.க. கேட்டிருந்தோம். முதலமைச்சர் அன்பு கட்டளையுடன் கேட்டதால், மறுப்பின்றி கூட்டணி தர்மத்துடன் கேப்டன் ஒப்புக்கொண்டார். அ.தி.மு.க., தே.மு.தி.க. இயற்கையாக அமைந்த கூட்டணி. இரண்டும் நான்கெழுத்து, இரண்டும் மூன்று நிறம், அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க.,வினர் பக்திமான்கள், பண்பாளர்கள், பணிவானவர்கள், பணிவு உள்ளவர்கள், துணிவாக இருப்பார்கள். எதிர்கட்சியினர் பரோட்டா கடைக்கு போனாலும், ப்யூட்டி பார்லர் போனாலும் அடித்துக் கொள்கிறார்கள். கேப்டன் கட்டளையின் பேரில் நான் வந்துள்ளேன். ஆட்சியில் இல்லாத போது இவ்வளவு ரவுடிசம் என்றால், ஆட்சி அவர்களிடம் சென்றால் என்னவாகும். அதிக தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க., தே.மு.தி.க.வின் இப்படை தோற்கின் எப்படை வெல்லும். கேப்டன் நலமாக உள்ளார். அவர் எந்த நேரத்தில் எப்போது பிரச்சாரத்திற்கு வருவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். இக்கூட்டணி இப்போது மட்டுமல்ல, இனி வரும் தேர்தலிலும் தொடரும், எனக் கூறினார்.



இறுதியில், ஜெயலலிதா பாணியில் இரட்டை இலைக்கு வாக்களிப்பீர்களா...?, தேர்தலில் வெற்றி பெற வைப்பீர்களா..?, இந்தக் கூட்டணிக்கு வெற்றியை தருவீர்களா..?, என தொண்டர்களை பார்த்து கேள்வி கேட்டு பிரச்சாரத்தை முடித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...