கோவை : காரமடை வனப்பகுதியில் சட்டவிரோதமாக மான் வேட்டையில் ஈடுபட்ட 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோவை : காரமடை வனப்பகுதியில் சட்டவிரோதமாக மான் வேட்டையில் ஈடுபட்ட 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

காரமடை வனப்பகுதிக்குட்பட்ட கோபனாரி வனப்பகுதியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள குருந்தமலை முருகன் கோவில் மலைப்பகுதியில் சில மர்ம நபர்கள் மானை அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலறிந்து சென்ற வனத்துறையினர், மானை வேட்டையாடிய பெரியார் நகரைச் சேர்ந்த எஸ். சதீஷ்குமார், ஆர். ரங்கசாமி, ஆர். ரஞ்சித் மற்றும் பி. ரகுநாதன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மான் இறைச்சி மற்றும் தோலை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர், குற்றவாளிகள் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.