நீலகிரி : நீலகிரியில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 2.46 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ. 50,000-க்கு மேல் கொண்டு செல்லப்படும் ரொக்கம் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த கடந்த 11-ம் தேதி முதல் இன்று (மார்ச் 27) வரை நடத்தப்பட்ட சோதனையின் போது, எவ்வித ஆவணங்களுமின்றி கொண்டு செல்லப்பட்ட 2 கோடியே 46 லட்சத்து 31 ஆயிரத்து 710 ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்று ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விபரம் :
உதகை - ரூ. 4,34,000
கூடலூர் - ரூ. 11,74,500
குன்னூர் - ரூ. 1,06,500
மொத்தம் (இன்று மட்டும்) - ரூ. 17,15,000