நீலகிரி : நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்ற நிலையில், நீலகிரி தொகுதியில் 10 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு தாக்கல் கடந்த 19-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. இதைத் தொடர்ந்து, இறுதி வேட்பாளர் பட்டியலை நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், அ.தி.மு.க., வேட்பாளர் மா. தியாகராஜன், தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசா, மக்கள் நீதி மய்யத்தின் ந. ராஜேந்திரன், பகுஜன் சமாஜ் கட்சியின் அசோக் குமார் உள்பட 6 சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வேட்பு மனுக்களை திரும்பப் பெற நினைக்கும் வேட்பாளர்கள் நாளை திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.