கோவை : தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால், முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆ. ராசாவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.,வின் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சரும், கழக கொள்கை பரப்பு செயலாளருமான ஆ. ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே பிரச்சார வாகனத்தில் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர்.

இதன் பின்னர் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது :- தமிழகத்தில் தற்போது தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் அலை வீசி வருகிறது. ஜந்து ஆண்டுகளில் பா.ஜ.க ஆட்சியில் மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யப்படவில்லை தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால், முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மோடியின் ஆட்சியில் பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இத்தேர்தலில் மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே நமது முக்கிய குறிக்கோள். அதேபோல, மோடியின் கைத்தடிகளாக செயல்பட்டு வரும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அணியினருக்கும், இத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட தமிழக மக்கள் முன்வர வேண்டும்.
அ.தி.மு.க. தற்போது அடல்ட்ஸ் ஒன்லி (Adults Only) தி.மு.க.,வாக மாறிவிட்டது. இதற்கு பொள்ளாச்சி பாலியல் வன்முறை கொடூரங்களே சாட்சி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க.,வை சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன் மகன் காரில் இருந்து ஒரு இளம்பெண் தூக்கி வீசப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனை போலீசார் விபத்தாகப் பதிவு செய்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு கூட கோவை அருகே ஆறு வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிருகிறது, ஆனால் ஆட்சியாளர்கள் தற்போது அம்மா ஆட்சி நடைபெறுவதாக கூறுகின்றனர். மறைந்த தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் செல்ல பிள்ளையாகவும், ஏற்கனவே மத்திய அமைச்சராக பணியாற்றிய அனுபவம் பெற்ற ஆ. ராசாவுக்கு இத்தொகுதி மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும், என பேசினார்.