வேட்டை தடுப்பு காவலர்களை தொடர்ந்து அதிவிரைவு படையினருக்கும் வாழ்நாள் காப்பீடு திட்டம் அறிமுகம்

கோவை : கோவை வனப்பகுதிக்குட்பட்ட வேட்டை தடுப்பு காவலர்களை தொடர்ந்து, இந்த ஆண்டு முதல் அதிவிரைவு படையினருக்கும் வாழ்நாள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோவை : கோவை வனப்பகுதிக்குட்பட்ட வேட்டை தடுப்பு காவலர்களை தொடர்ந்து, இந்த ஆண்டு முதல் அதிவிரைவு படையினருக்கும் வாழ்நாள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு கோவை வனப்பகுதிக்குட்பட்ட 136 வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் வாழ்நாள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு அதிவிரைவு படையினரும் இந்தத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், 10 பேர் பயனடைய உள்ளனர். 

இந்தக் காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ. 1 லட்சம் வரை மருத்துவ சிகிச்சையும், ஒருவேளை இறப்பு ஏற்பட்டால் ரூ. 1.5 லட்சம் வரையில் இழப்பீடும் பெற முடியும். இந்த திட்டத்தில் 6 வேட்டை தடுப்பு காவலர்களும், 10 அதிவிரைவு படையினரும் என மொத்தம் 146 பேர் பயனடைகின்றனர். இந்த திட்டத்திற்கான தொகையை மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு அறக்கட்டளை செலுத்துகிறது. 

"இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகள் ரூ. 1 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை பயனாளி உயிர் இழந்துவிட்டால், சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ. 1.5 லட்சம் கிடைக்கும். அதிவிரைவுப் படையைச் சேர்ந்த ஆர். வெங்கடேசன் என்பவர் விநாயகனை விரட்டும் போது, எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இதன்மூலம், அதிவிரைவுப் படையினரையும் இந்தத் திட்டத்தின் கீழ் சேர்க்க முடிவு செய்தோம். 

கடந்த 2017-ம் ஆண்டு காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட 2 வேட்டை தடுப்பு காவலர்களுக்கு இந்தக் காப்பீடு திட்டம் முதன்முதலில் வழங்கப்பட்டது. ஆபத்தான பணியில் ஈடுபடும் இதுபோன்ற ஊழியர்களுக்கு காப்பீடு செய்யாததால், அவர்களுக்கு பொதுமக்களிடம் திரட்டப்பட்ட நிதியின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது," என்கிறார் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் பார்த்திபன். 

இது குறித்த காப்பீடு சான்றிதழ்களை மாவட்ட வன அதிகாரி டி. வெங்கடேஷிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...