பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பார் நாகராஜ் ஆஜர்

கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பார் நாகராஜ் கோவை அவிநாசி சாலையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.


கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பார் நாகராஜ் கோவை அவிநாசி சாலையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.



பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் முகநூல் மூலம் கல்லூரி மாணவிகளைகளிடம் நட்பாக பழகி ஆபாச படம் எடுத்து,, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் ஒருவர் அளித்திருந்தார். இந்த புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை அடுத்து, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தலைமறைவாய் இருந்தார். பின்னர், காவல்துறையினர் தனிப்படை அமைத்து முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசையும் கைது செய்தனர். 

இதையடுத்து, இந்த வழக்கு மாவட்ட போலீசாரிடமிருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீசார் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசின் வீடு, பண்ணை வீடு மற்றும் இதர குற்றவாளிகளின் வீடு என பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசின் சம்பந்தப்பட்ட பல நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதேபோல, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொறுப்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த நிலையில் தி.மு.க.வின் கோவை புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மகன் மணிமாறனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளனர். அதேபோல, பார் நாகராஜும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில், தற்போது பார் நாகராஜ் கோவை - அவினாசி சாலை மேம்பாலம் அருகே உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். இவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...