கோவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 15 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

கோவை : கோவையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்த 15 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.



கோவை : கோவையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்த 15 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடக்கும் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. அ.தி.மு.க., தி.மு.க., கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சைகள் என பல்வேறு வேட்பாளர்கள் 38 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி கு. ராசாமணி இன்று வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையை நடத்தி, வேட்பாளர்களின் இறுதி பட்டியலை வெளியிட்டார். 

அப்போது, இது குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு அவர் பேட்டியளித்ததாவது :- கோவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 38 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர். தகுதியின் அடிப்படையில் 15 பேருடைய விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. 23 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதேபோல, பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் 41 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தகுதியின் அடிப்படையில் 17 பேருடைய மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 24 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது, என்றார். 

மேலும், சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு நிராகரித்தது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- உறுதிமொழி ஆவணம் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை. பொது தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் அனைத்து ஆவணங்களும் சரி பார்க்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது. மேலும், வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டியது மற்றும் குறைபாடுகள் குறித்து எழுத்து மூலமாக கொடுக்கப்பட்டு காலஅவகாசமும் வழங்கப்பட்டது. தெளிவான ஆய்வுக்குப் பின்னரே வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பொள்ளாச்சியில் ஒரு வழக்கும், கோவையில் மக்கள் நீதி மய்யம் அரசியல் நிகழ்விற்கு முன் அனுமதி இல்லாமல் இடம் அளித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, என்றார். 

இதேபோல, கடலூரில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அ.ம.மு.க. வேட்பாளர் நா. கார்த்திக்கின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...