வேட்பு மனுக்களை மறுபரிசீலனை செய்யக் கோரி கோவையில் சுயேட்சை வேட்பாளர்கள் தர்ணா போராட்டம்

கோவை : கோவையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை மறுபரிசீலனை செய்யக் கோரி சுயேட்சை வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.


கோவை : கோவையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை மறுபரிசீலனை செய்யக் கோரி சுயேட்சை வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.



17-வது நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ளது. காலியாக உள்ள 18 சட்டமன்றத் தேர்தலுக்கும் இதனுடன் தேர்தல் நடத்தப்படுகிறது. நேற்றுடன் வேட்புமனுக்கள் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், இன்று அதற்கான பரிசீலனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோவையில் வேட்புமனுத் தாக்கல் செய்ய செய்த பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த தேர்தல் மன்னன் நூர் முஹம்மது, சுந்தர் ராஜ், யுவராஜ், உமர் அலி ஆகியோரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 



இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "ஒரு சிறிய இடத்தில் காலியாக உள்ளது நிரப்பப்படவில்லை. சரி என டிக் செய்ய வேண்டிய இடத்தில் அது விடுபட்டுள்ளது. ஒரு எழுத்து தவறாக உள்ளதால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் காரணம் கூறி தங்களது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இந்த வேட்பு மனுக்களை மீண்டும் பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும்," எனக் கூறி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தரையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

மேலும், இத்தனை முறை மனு தாக்கல் செய்ய வந்தபோது, தவறுகளை அதிகாரிகள் சுட்டி காட்டதது ஏன்..? என கேள்வி எழுப்பி காவல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றம் மூலமே இப்பிரச்சனையை தீர்த்து கொள்ள முடியும் என அதிகாரிகள் சமாதானம் செய்தும், அதனை நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் ஏற்று கொள்ளவில்லை. பெரிய கட்சிகள் மட்டுமே போட்டியிட வேண்டும் என இருப்பின் ஜனநாயகம் எங்கே உள்ளது. இங்கு பணம் படைத்தவர்களே போட்டியிட முடியும். சாதாரண மனிதன் தேர்தலில் போட்டி என்பது வெறும் கனவாகப் போகும், என்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...