கோவை : மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுவதற்காக அகில இந்திய மக்கள் கழகத்தின் வேட்பாளர் கே. ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடக்கும் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. அ.தி.மு.க., தி.மு.க., கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சைகள் என பல்வேறு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி கு. ராசாமணி இன்று வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையை நடத்தி வந்தார். அதில், அகில இந்திய மக்கள் கழகத்தின் வேட்பாளர் கே. ராகுல் காந்தியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
கே. ராகுல் காந்தியின் உறுதிப் பத்திரத்தில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு ஆன ஆண்டை குறிப்பிடவில்லை என்றும், இதனால், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
"இது சிறிய அளவிலான பிழைதான். வேட்பு மனு தாக்கல் குறித்த சந்தேகங்களுக்கு தீர்வளிக்க தேர்தல் ஆணையம் எங்களுக்கு உதவ முன்வரவில்லை. மேலும், தேர்தலில் நிற்பதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 25,000 உயர்த்தப்பட்டிருப்பதால், சாதாரண மக்களால் தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது," என்கிறார் கே. ராகுல் காந்தி.
இவர், 2014-ம் ஆண்டு நடந்த மேயர் தேர்தலிலும், 2016-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளரராக போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் 2,000 வாக்குகள் பெற்றார்.
மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிட்டிருந்தால், அவரை எதிர்த்து போட்டியிட இருந்ததாக அகில இந்திய மக்கள் கழகத்தின் வேட்பாளர் கே. ராகுல் காந்தி தெரிவித்தார்.